“சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் ரோலாமே?என்னப்பா இது? யங் ஹீரோ இப்படில்லாம் நடிக்கலாமா?”
“உனக்கெங்கே வலிக்கிது,அதச்சொல்லு.! பஸ் ஓட்றவனுக்கு லாரி ஓட்டத் தெரியாதா? அரசியல் படம். எந்த அரசியல்வாதி யோக்யம்கிறே கமிஷன் வாங்காத ஒத்த ஆளை காமி! அரசியல்வாதியா நடிக்கணும்னா ஊழல் பண்ற மாதிரி நடிச்சுத்தான் ஆகணும்.
‘திரும்பிப்பார்’னு ஒரு படம் .கலைஞர் கதை வசனம்.நடிகர் திலகம் பொம்பள பித்து பிடிச்சு அலைவார். பக்கா வில்லன். கடேசியில் “பரந்தாமா,உனக்கு ஒரு பெண்தானே வேணும் இதோ என்னை எடுத்துக்கோன்னு’ சகோதரி பண்டரிபாயே பலி ஆடு மாதிரி வந்து நிப்பாங்க. திலகம் துடிச்சிப் போவார். திறமை உள்ளவன் என்ன வேஷம்னாலும் ,எத்தனை வேஷம்னாலும் போடலாம். சிம்புக்கு திறமை இருக்கு.புத்திசாலி. டைரக்டர் வெங்கட்பிரபுக்கு இந்தக்கால அரசியல் நல்லாவே தெரியும். அவங்க அப்பா அடிபட்ட கதையையே படமா எடுக்கலாம். இன்னும் கேஸ் முடியல. சிம்புவின் அப்பாவே பழுத்த அரசியல்வாதி.”
“புரியிதுண்ணே! நல்லா புரியிது!!”