திமுக தலைவர் கலைஞர் மரணத்துக்குப் பின்னர் உடைக்கும் முயற்சியில் சிலர். ‘நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ “என காத்திருக்கும் மத்திய மாநில கட்சிகள். உடன்பிறப்பே ‘ஆதங்கம்’ என அறிக்கை விடுகிறார். இதை எல்லாம் பார்த்த செயல் தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வாசித்திருக்கிறார்.
“சூரியன் இல்லாத வானமாக, சொற்கள் தொலைத்த மொழியாக, மாலுமி இல்லாத கப்பலாக, தாயை இழந்த பிள்ளையாகத் தலைவர் கலைஞரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் கழகத்தின் கோடி உடன்பிறப்புகளில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் இன்னமும் வேதனைக் கடலில் எல்லோரது மனதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மதவெறியை விதைத்து, மாநில உரிமைகளை பறித்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள். தலைவரை இழந்த திமுகவில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட அரசியல் எதிரிகளுக்கு அதிக அக்கறை.
நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் துணையோடு!” என அறிக்கையில் கூறியுள்ளார்.

இது யாருக்கு விடுத்த எச்சரிக்கை? செல்லூர் ராஜுக்கா? இவர்க்கெல்லாமா எச்சரிக்கை விடுவார்?
இருக்கலாம். அவரும் ஓர் அறிக்கை வாசித்திருக்கிறாரே! “திமுகவில் நிச்சயம் பிளவு ஏற்படும்.அழகிரி நாற்பது ஆண்டு கால அரசியல் பண்ணியவர். மதுரையைச்சேர்ந்த எனக்கு நன்றாகத் தெரியும். அவரது திறமை தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு அனைத்தும் எனக்குத் தெரியும்” என்று சொல்லியிருக்கிறார்.