‘தல’ அஜித் ஏமாத்தினாரா கிரேசி மோகனை?

மறதி என்பது மனிதருக்கு இயற்கை அளித்திருக்கிற வரம்  என்றே சொல்லலாம். சந்தர்ப்பம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் . அதனால்தான் பலர் மறதி வந்தது போல நடிக்கிறார்கள். ஒரு தடவை கிரேசி மோகன் அஜித்தைப் பார்க்க  அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.  ஏகன் படத்துக்கு வசனம் எழுதுகிற வாய்ப்பு வந்தது ,ஆனால் அதை கிரேசி தவறவிட்டு விட்டார்,அதை  தனது தவறு என்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் கிரேசி. 

‘தல’யின் வீட்டில் சாய்பாபாவின் படம் இருந்திருக்கிறது. அதைப் போல தனக்கும் ஒன்று வேணும் என்று அஜித்திடம் கேட்க.

“நீங்க வீட்டுக்குப் போங்க சார்.! வரும்” என்றிருக்கிறார் தல .

ஆனால் வரவில்லை.

“என்ன சார் ஏமாத்திட்டிங்களே!” என கிரேசி சொல்லிக் கொண்டிருந்தபோது வாசலில்  அஜித்தின் உதவியாளர் சாய்பாபா படத்துடன்!