என்னாதான் செருப்பில அடிக்காத குறையா சொன்னாலும் சிலர் கேட்கவில்லை என்றால் …..
இன்னமும் சிலர் வாய்ப்புக்காக கற்பை காணிக்கையாக கொடுக்கிறார்கள் என்பது அர்த்தமா?
ஆந்திராவில் ஆர் எக்ஸ் 1௦௦ படம் .பெருத்த அறுவடை. படத்தில் லிப்லாக் சீன்கள் இருக்கின்றன, முத்தம் கொடுத்து நடித்திருக்கிற நடிகை பாயல் .மும்பை.
தனக்கு இப்போது ஏற்பட்ட அனுபவத்தை சொல்லி இருக்கிறார். அக்கட பூமியின் ஸ்ரீ ரெட்டி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆழம் அகலமாக பெயர்களுடன் சொல்லி ‘நாய்களா’ என சொல்லியும் கூட இன்னும் பலர் தப்பாகவே அலைகிறார்கள் என்பதை பாயலின் பேட்டி உணர்த்துகிறது. அவர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
“ஒரு ப்ரொட்யூசர் வந்தார், நடிப்பை பாராட்டினார். அவர் ஒரு படம் பண்ணப்போவதாகவும் அதில் நான்தான் நடிக்கவேனும்னார். சரின்னேன். மெதுவா அவரை ‘கவனிச்சுக்கணும், காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்னார். போய்யா வெளியே..! என் கண்ணுலேயே படாதே! ஓடிப்போயிடு.”னு விரட்டி விட்டேன்.நான் வடநாட்டுப் பொண்ணு. துணிச்சலானவள்.படத்தில கிஸ் பண்ணினவ என்கிறதால ஒவ்வொருத்தனையும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பென்னு அர்த்தமா? அதுக்காக நான் இந்த தொழிலுக்கு வரலே! கபர்தார்” என பொங்கிவிட்டார்!
என்னதான் அடிச்சு வெளுத்தாலும் அழுக்கு போகலேன்னா வெள்ளாவியில் வச்சிரு பாயல்!