கவர்ச்சியே இல்லாதவளுக்கு உள்பாடி போட்டாதான் என்ன சும்மா தாவணியை சுத்தி விட்டால்தான் என்ன.? “ஜவுளிக்கடை பொம்மை கூட எடுப்பா இருக்கேய்யா!”என புலம்பி என்ன ஆகப்போகுது.? டைட்டிலில் இருந்த எதிர்பார்ப்பு கதையில் இருக்க வேணாமா, இயக்குநர் சர்ஜுன். ?
“காசு கேட்டேன்.இல்லேன்னுட்டா கொன்னுட்டேன்.”என்ற அக்கா புருஷனை மச்சான் போட்டுத் தள்ளுறான் ஆன் த ஸ்பாட்! ஒரே சமயத்தில் இரண்டு கொலை. அக்கா மகன் அநாதை!
தாய் மாமனும் மருமகனும் 14 வருசத்துக்குப் பின்னாடி சந்திக்கிறார்கள். கோடிகளை குவிக்க அவர்கள் போட்ட ஆள் கடத்திய திட்டம் என்னாகுது, ரிட்டையர்ட் போலீஸ் அதிகாரி சத்யராஜிடம் எப்படி குற்றவாளிகள் மாட்டுகிறார்கள் என்பது ‘எ.இ,ம.ந.கதை.
தாய் மாமனாக கிஷோர்.தாடியில் வெள்ளையும் புல் கறுப்புமாய் வருகிறார்.கண்டினியூட்டி மிஸ்ஸிங். காதலி வரலட்சுமியையே கடத்தி வந்து மாமனை ஏமாற்றப் பார்க்கிற கேரக்டரில் விவேக் ராஜகோபால். இருவருமே கெட்டிக்காரத்தனமாக நடித்திருந்தாலும் கதையில் இழுவை அதிகம். அண்ணே யோகிபாபு.! கவனமா இருங்கண்ணே! உங்க எபெக்ட்டே தெரியல!
கை,கால்,வாய் எல்லாத்தையும் கட்டிப்போட்டு விட்டு இதுதான் வரலட்சுமி சரத்குமார் என்று முக்கால்வாசி படத்தில் காட்டிவிட்டு கொஞ்சூண்டு காதல், பாட்டு என்கிறார்கள். “பொருளாத்தான் பாக்கிறார். பொண்ணா பார்க்கல “என்கிற டயலாக்கை உல்ட்டா பண்ணி வரலட்சுமியை பொண்ணா காட்டியிருக்கலாம். ஆறுதலா இருந்திருக்கும்.சத்யராஜ் சார், உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியல. இது பாகுபலிக்கு பிந்தின படமா?
சுதர்சனம் சீனிவாசனின் ஒளிப்பதிவில் நடமாடும் இடம் ‘பளிச்’