துறவி கூட காதல் வயப்படுகிறவன்தான். அரசனும் விலக்கல்ல .நூற்றுக்கணக்கில் மனைவிகளும் ஆசை நாயகிகளும் அரசனுக்கு இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன. வசந்த மாளிகையில் நடிகர் திலகம் உருகி உருகிக் காதலித்த வாணி ஸ்ரீ யை ஆந்திராவின் விவசாய அமைச்சர் சோமி ரெட்டியும் கடுமையாக காதலித்திருக்கிறார்.
தென்னிந்திய திரை உலக கலாசார அமைப்பின் தொடக்க விழா நெல்லூரில் நடந்தது. நடிகை வாணி ஸ்ரீ கலந்து கொண்ட இந்த விழாவில்தான் சோமிரெட்டி தனது காதலை வெளிப்படுத்தினார்,
“எனது இளமைப் பருவத்தில் வாணி ஸ்ரீ மீது தீவிரமான காதல் .ஒரு படம் விட மாட்டேன்.திரும்பத் திரும்ப பார்ப்பேன்.இன்னும் என் மனதில் அந்த நினைவுகள் அழியாமல்தான் இருக்கிறது.”என்றார்.
திருப்பதி மலை படிக்கட்டில் யாராவது குறும்பர்கள் செதுக்கிவிடப்போகிறார்கள்.