“ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “ என்கிற பாடல் ஒரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் சொக்கிச்சுருள வைத்த சுந்தர வரிகள்.அமரர் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி பாடிய வரிகளைத் தலைப்பாக்கி படம் எடுத்திருக்கிறார்கள்.
ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் . . நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அழகுராஜ்.இவர் என்ன சொல்கிறார்?
“முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம்”என்கிறார்..
வரட்டும் பார்க்கலாம்!