மரணம் எந்த வழியில் இருந்து வரும் என்பது தெரிவதில்லை. மகனைப் போலவே தந்தையும் கார் விபத்தில் மரணம் என்பது விதியா?
என்.டி ராமராவின் மகன் ஹரி கிருஷ்ணா. இவர் அரசியல் வாதி, நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
நெல்லூர் மாவட்டம் ஹாவேலியில் நடக்க இருந்த கல்யாணத்துக்காக அதிகாலை நாலரை மணி அளவில் ஹைதராபாத்திலிருந்து தனது SUV வாகனத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார். 160 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்றிருக்கிறது. எதிரில் வந்த வாகனத்துக்காக வழி விட்டு ஒதுங்க எமன் எதிரில் இருந்திருக்கிறார்,
சாலை டிவைடரில் வேகமுடன் மோதி கார் கவிழ்ந்திருக்கிறது. காரில் இருந்த இருவருக்கு படுகாயம். காமினேனி மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை. ஹரிகிருஷ்ணாவை காப்பாற்ற முடியவில்லை.
அதிக வேகம் ஆளைக்கொல்லும் வாசகம் சில நேரங்களில் மறந்து விடுகிறது.