விவகாரங்களில் சிக்குவது என்பது ராம் கோபால் வர்மாவுக்கு வேட்டைக்குப் போவது மாதிரி! விரும்பி வம்புகளில் மாட்டி விழுப்புண்களைப் பெறுவதில் அவ்வளவு ஆசை,
கன்னடத்தில் ‘பைரவ கீதா ‘என்கிற படத்தை சில மொழிகளில் டப் செய்யவிருக்கிறார். தமிழுக்கு வந்தாலும் வரலாம். ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்த ஹீரோ. உயர்ந்த சாதிப் பெண் ஹீரோயின். நாயகன் பெயர் பைரவன்,நாயகியின் பெயர் கீதா .இருவரும் விரும்புகிறார்கள் .சாதி வெறி தடுக்கிறது,இதுதான் கதையின் ஒன்லைன்!
கடுமையான வசனங்களும் காட்சிகளும் இருப்பதைப் போல காதல் காட்சிகளிலும் நெருக்கமும் கிறக்கமும் அதிகம் என்கிறார்கள். சாம்பிளுக்கு அடர்முத்தக்காட்சி அடங்கிய டிரெய்லரும் விட்டிருக்கிறார் வர்மா.