கண்ணடித்து கையில் ‘கன்’ வைத்து துப்பாக்கியினால் சுட்டு இந்திய இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர் பிரியா வாரியர். காதலர்களுக்கு கண் அடிக்கும் புதிய உத்தியைக் கற்றுக் கொடுத்த புண்ணியவதி. நஜ்ரியா நஜீமுடன் ஒப்பிட்டு “நீயெல்லாம் ஒரு நடிகையா ” என கன்னாபின்னாவென வாரிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலளித்த அறிவிப்பில் அழாத குறை பிரியாவின் அறிவிப்பில் தெரிகிறது.
“கடுமையான மன உளைச்சல்.. தூக்கி வைத்து என்னைக் கொண்டாடியவர்களே என்னை குறை சொல்வது நீதியா? அநீதி!
வேதனையாக இருக்கிறது! நஜ்ரியா நஜீமுடன் என்னை கம்பேர் பண்ணுகிறீர்களே , இது நியாயமா?
எனது திறமையைக் காட்டுவதற்கான படம் இன்னும் கிடைக்கவில்லை. நானும் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் வசை பாடலாமா பிரியமான ரசிகாஸ்!
எனது நடிப்பில் குறை இருந்தால் சொல்லுங்கள். இன்னொரு நடிகையுடன் கம்பேர் பண்ணலாமா? இது நியாயமா?எனது அடுத்த படம் வரும் வரை வெயிட் பண்ணுங்க..” என்பதாக மனம் குமுறி இருக்கிறார்.