காமடி கலக்கல் படம் என்பதினால் கதாநாயகனின் பெயரை ஆச்சு என வைத்திருக்கிறார்களா ,அவரது நிஜப்பெயரை மறைத்திருப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஒருவேளை ஆச்சு என்கிற பெயரில் சாமி இருக்கிறதா?
படத்தின் டைட்டிலும் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க!’ வித்தியாசமாத்தான் எறங்கி இருக்காங்க.! இந்த படத்தின் இயக்குநர் சு.சத்திய சீலன். தயாரிப்பாளர் ஏ.சரவணன், ஹீரோயினாக பிரிஷா, இசையும் பாடலும் சவுந்தர்யன்.
இயக்குநர் எப்படி இப்படியொரு வித்தியாசமான டைட்டிலுக்கு கதையைப் பிடித்தார்?
“இது முழுக்க முழுக்க பேமிலி காமெடி சப்ஜெக்ட்.இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம்.
தயாரிப்பாளர் சரவணன் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்….தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள் ..என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள்.. என்ன மாதிரியான படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது அத்துப்படி.
அப்படிப்பட்ட சரவணன் தேர்ந்தெடுத்த கதை தான் இந்த லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கதை. அந்த குடும்பத்தை பார்ப்பதே தப்பு என்று இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிற பகை…அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த பையனும் பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும். முந்தைய தலைமுறை மோதிக் கொள்ள, அடுத்த தலைமுறை காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பது தான் திரைக்கதை.” என்கிறார் இயக்குநர்.