சிந்துவெளி படத்திலேயே புரட்சிகரமாக நடித்திருந்தவர் அமலாபால். மாமனாரையே மடக்கிப் போட்ட கேரக்டரில் நடித்து பெரிய விவாதங்களுக்கு விதை போட்டவர்.
தற்போது மேயாதமான் படத்தின் இயக்குநர் ரத்னகுமாரின் ‘ஆடை’ படத்தில் நடித்திருக்கிறார். அதனுடைய பர்ஸ்ட் லுக் அண்மையில்தான் வெளியாகியது.
முகத்தில் கோபமும் அழுகையும் கலந்து கொதிக்கிறது. உள்ளாடை கிழிக்கப்பட்டு வன்முறைக்கு ஆளான பரிதாபம் . இதுவரை இந்த அளவுக்கு மார்பகம் தெரியும்வரை அவர் நடித்தது இல்லை.
இதைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டவும் செய்தார்கள்.சில கலாச்சார காப்பாளர்கள் ரசித்துவிட்டு வழக்கம்போல வசை பாடவும் செய்திருந்தார்கள்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமலாபால் பதில் அளித்துள்ளார்.
“ஆடை இல்லாமல் நடித்திருப்பது ஏன்? முதல் போஸ்டரை பார்த்து விட்டு பொங்கும் புண்ணியவான்கள் படத்தைப் பார்த்தபின் பாராட்டவே போகிறார்கள்! திரைப்படம் வந்த பிறகுதான் அப்படி ஏன் நடித்திருக்கிறேன் என்பது தெரியவரும்.” என்கிறார் அமலாபால்.