முன்னொரு காலத்தில் ,அதாவது ‘டிரிபிள் ஏ ‘ படத்தில் நடித்த காலத்தில் இளவரசு சிம்புவுக்கும் பவுர்ணமி நிலா தமன்னாவுக்கும் உரசல். உறவு கெட்டது. சரியாக பேசிக் கொள்வதுமில்லை.
இப்படி ஒரு சிக்கல் ஏரியாவில் இருவருமே இருக்கிறபோது சமரசம் இல்லாமல் சகஜமாக நடிக்க முடியுமா?
இதை இயக்குநர் சுந்தர்.சி.யிடம் தமன்னா சொல்ல அவர் இருவரிடமும் பேசி அமைதிப் புறாவை கையில் கொடுத்து விட்டார்.
இதன் பின்னரே தமன்னா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
சுந்தர் சி. இயக்கம் புதிய படத்தில் இரு நாயகிகள். ஒருவர் மேகா ஆகாஷ், மற்றவர் தமன்னா,
சிம்பு அன்பானவன்.அன்புக்கு அடங்குகிறவன். அசராத நடிகன் இப்படியும் புதிய டிரிபிள் ஏ வுக்கு அர்த்தம் சொல்லலாம் .