பிக்பாஸ் என்பது எழுதி நடிக்கப்படுகிற சீரியல் ரகம். அதில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முன்னதாகவே முடிவு செய்துவிட்டுத்தான் விளையாடலைத் தொடங்கி இருக்கிறார்கள். கடுமையான டாஸ்க்குகள் என சொல்லப்பட்டாலும் அதில் கூட மும்தாஜ் கலந்து கொள்வதில்லை. உடல் நலம் இல்லையாம். பாலாஜியை மொட்டை அடிக்கலாம். அலர்ஜி ஆகுமா ஆகாதா என்பதைக்கூட சிந்திக்காமல் சென்றாயன் தலைக்கு கலர் சாயம் அடிப்பார்கள் .மும்தாஜ்க்கு பாய்ஸ் கட் அடிங்களேன்.பார்க்கலாம், ஜனனியின் புருவத்துக்கு ப்ளீச் பண்ணியதைப் போல மல மல நடிகைக்கு செய்து பாருங்களேன். காட்டுமிராண்டி காலத்து செயல்களையெல்லாம் டாஸ்க் என்கிற பெயரில் செய்கிறார்கள். ஆங்கிலம் பேசக்கூடாது என்பது பிக்பாஸ் விதி. ஆனால் பிக்பாஸ் சீரியலில் பெரும்பாலும் ஆங்கிலம்தான். இதை எல்லாம் கண்டிக்கமுடியாமல் திணறுவது என்னமோ கமல்தான். அவர் போர்ஷனை சிறப்பாக செய்து விடுகிறார். எல்லாம் இல்லுமினாட்டி மந்திரம்.! நேற்று வெளியேற்றப்பட்ட சென்ட்ராயனை வரவேற்கிறார்கள் திரை உலக பிரபலங்கள் .அவர்களில் ஒருவர் மூடர் கூடம் இயக்குநர்.