
காதலித்து மணந்து கொண்ட வாழ்க்கை கசந்து போய் கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தது ஊருக்கேத் தெரியும். ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர் மண்வாசனை ரேவதி. மனம் நொறுங்கி மணவாழ்க்கை முறிந்தது. இருவரும் தனித்தனியே.! 
தற்போது ஒரு ரகசியத்தை பகிரங்கமாக்கி இருக்கிறார் ரேவதி. அவருக்கு ஐந்து வயதில் மகள் இருக்கிறாள். பெயர் மகி. தத்து எடுக்கப்பட்டவள் இல்லை. பெற்று எடுத்த மகள் .இப்போது வயது ஐந்து. 
“தாய்மை என்பது பெண்ணின் முழுமை. அதற்காகவே ஏங்கி இருக்கிறேன். எனவே டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்று பெண் குழந்தையைப் பெற்று எடுத்தேன். எல்லோரும் தத்து எடுத்த பிள்ளையாகவே தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவள்தான் என் உலகம். என் சந்தோசம். இதைப் பற்றி நான் யாருடனும் பேசியதில்லை” என்கிறார் ரேவதி.
வாழ்த்துகள் ரேவதி.












