காவல் தெய்வங்கள் கணக்கில்லாமல் இருப்பது நம்ம ஊர்லதான். அந்த தெய்வங்களின் அருவாள்கள் ஆள் பார்த்துதான் குறி வைக்கும்.
சர்க்கார் படத்தில் விஜய் சிகரெட் புகைப்பது மாதிரி ஒரு விளம்பரத்தை விட்டார்கள்.
அவ்வளவுதான் பாமக தரப்பில் குமுறி விட்டார்கள். தயாரிப்புத் தரப்பு உடனடியாக திரும்பப் பெற்றது.
ஆனால் ரசிகர்கள் அந்த படத்தைத்தான் வைத்துக் கொண்டாடி விட்டார்கள். என்ன செய்ய முடியும்?
தற்போது ஸ்ரேயாவின் ஒரு படம் வெளியாகி இருக்கிறது, கிங் சைஸ் சிகரெட்டை ஸ்டைலாக பிடிக்கிறார். இதை பாமக தலைவர் டாக்டர் பார்க்க மாட்டார் என்கிற தைரியம்?
என்ன பண்றது…ஆந்திராவில் எங்கள் டாக்டர் மாதிரி ஒருத்தர் இல்லியே! சென்னைக்கு இந்தப்படம் வந்தால் புகை படத்தை எடுத்து விடுங்கள்
அண்டை மாநிலம் என்பதால் கண்டிக்கமாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள்