தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த அத்தாரிண்டிகி தாரேதி என்ற படத்தை இயக்குனர் சுந்தர். சி .தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் கதாநாயகனாக சிம்பு நடிக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் கமிட்டாகியுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் தொடங்கியது. அங்கு இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தொடர்ந்து நடக்கவுள்ளதாம்.சிம்பு இம்மாத இறுதியிலிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.