தளபதி விஜய்யை வைத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. ஷங்கரின் மாணவர் என்பதால் இண்டஸ்ட்ரியில் தனித்த மரியாதை உண்டு. ‘மெர்சலின்’ வெற்றியினால் சற்று வெயிட் போட்டுவிட்டார்,.இது இயல்புதான்!
ஆனாலும் ‘அனாவசிய செலவு நாயகன் ‘என்கிற பெயர் அநியாயமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. என்னதான் டிடர்ஜென்ட் போட்டு வெளுத்தாலும் போக மாட்டேன் என்கிறது. என்ன செய்ய?
விஜய்யின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்.! தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் பிரதர்ஸ். இவர்களின் படத்துக்காக இயக்குநர் அட்லிக்கென என ஒரு அலுவலகம் தந்தது .
ஆனால் தனக்கென ஒரு அலுவலகம் இருப்பதால் ஏஜிஎஸ் ஒதுக்கும் அலுவலகம் வேண்டாம் என மறுத்ததுடன் மாதவாடகையை நீங்கதான் தரவேண்டும் என அட்லி தரப்பு சொல்லி விட்டதாம்.
“எங்கள் அலுவலகம் வந்தால் எல்லாச் செலவும் எங்களுடையது. உங்கள் அலுவலகம் என்றால் உங்கள் செலவு “என்று ஏஜிஎஸ் நிறுவனம் கண்டிப்புடன் சொல்லி விட்டதாம்.
என்ன பண்றது?