“படாத எடத்தில அடி விழுந்திடும். பாதுகாப்பு கவசம் போட்டுக்க. நான் பாலா ஸ்கூல் !” என்று வரலட்சுமி மிரட்டுகிறார் என்றால் பாலாவிடம் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது புரியும். சிலையை செதுக்குவது ,அதுவும் அழகான சிலையை செதுக்கும் போது அங்கங்க அடிபடத்தான் செய்யும். சூர்யாவுக்கு திருப்பு முனையை தந்தவர் பாலாதானே! சீயான் விக்ரம் எந்த அளவுக்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருந்தது,அவரே தன மகனை பாலாவிடம்தானே ஒப்படைத்திருக்கிறார்.
ஆனால் உதயநிதி மென்மையானவர். பாலாவின் ஸ்கூலில் பிரம்படி கூட இயல்பாகத்தான் இருக்கும்.வலிக்குமே! சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரமின் ‘வர்மா’ முடிந்ததும் உதயநிதியின் படம்தான்!
நாளைய அரசியலுக்கு இவிடத்தில் பயிற்சி பெறுவதும் நல்லதுதான்!