தேசிய இயக்குநர் விருது பெற்றவர் இயக்குநர் அகத்தியன். நவரசநாயகன் கார்த்தியின் அன்பினை பெற்றவர்,
இவரது மகள்தான் விஜயலட்சுமி .நடிகையாக இருந்தவர்.சின்னத்திரையில் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி இடையில் பிக்பாசில் கலந்து கொண்டவர்,
ஆரம்பத்தில் இருந்து போராடியவர்களுக்கு இவரது இடைச்செருகல் அநீதியாகத் தெரிந்தது. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன அசிங்கம் நடந்து விடுமோ என பயப்படுகிறார்கள்.
ஆனாலும் பிக் பாஸ் தந்திரங்களில் விஜய லட்சுமி எந்த அளவுக்குப் பயன் படுவார் என்பது தெரியவில்லை.
தற்போது வெளியேற்றும் படலம் நடந்து வருகிறது. இதிலிருந்து தனது மகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இயக்குநர் அகத்தியன் தனது முக நூல் பக்கத்தில் மகளை ஆதரித்து வாக்களிக்க கேட்டிருக்கிறார்.