தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்தாக வேண்டும் என்கிற முடிவில் பாஜக தலைவர் அமித் ஷா உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல முறை பேசிவிட்டார் என்கிறார்கள்.
வருகிற தேர்தலில் பாஜக, அதிமுக, ரஜினி என்கிற அணிதான் வலுவானதாக இருக்கும் என மேலிடப் புள்ளிகள் கணக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.
மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் அதிமுக ஆட்சி இருப்பதால் எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்க முடியும், சட்ட ரீதியாக வந்தாலும் முடக்கலாம். அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு முடிந்தாலும் தீர்ப்பு இன்னும் வந்த பாடில்லையே !இதைப் போல சமாளித்துக் கொள்ள முடியும்.
திமுகவினர் மீதான வழக்குகளை காட்டி பலவீனப்படுத்தி விடலாம் என பாஜக மேலிடம் ரஜினியிடம் விளக்கி இருக்கிறது. ஆனால் ரஜினியோ “முதலில் எடப்பாடி,ஓபிஎஸ் தலைமையை மாற்றுங்கள் .பின்னர் பேசலாம் கூட்டணி பற்றி”என உறுதியாக சொல்லிவிட்டாராம்.