சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதியதிரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஜார்ஜியாவில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம்,பவண் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தாரின்டிகி தாரேதி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.இந்நிலையில்,இப்படத்தின் நாயகன்சிம்பு ஜீன்ஸ், பச்சை நிற டி சர்ட், கூலர்ஸ் என செம ஸ்டைலீஷாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.