திரை உலகில் அடுத்தவர்களை மொட்டை அடிப்பதுதான் வழக்கம். சற்றே கண் அயர்ந்தாலும் தனது வளர்ச்சியையும் சேர்த்தே மொட்டை அடித்து விடுவார்கள் என்பது தெரிந்தும் வசதியாக தலையை கொடுப்பார்கள்.
ஆனால் வித்தியாசமான கதைகளுக்காக மொட்டை அடித்துக் கொள்வது அவ்வப்போது நிகழும் ஆச்சரியம்.
பூமராங் படத்துக்காக நடிகர் அதர்வா மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதை பற்றி இயக்குநர் கண்ணன் என்ன சொல்கிறார்?
“பாலாவின் பரதேசி படத்திலேயே தன்னை மாற்றிக்காட்டியவர் அதர்வா. இன்று பிசியான நடிகர் .அடுத்தடுத்து படங்களை வைத்திருப்பவர்.அவரிடம் போய் என் படத்துக்காக மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பது நியாயமா?
கதையைக் கேட்டார். அவருக்கு மூன்று கேரக்டர்கள். அதில் ஒன்று மொட்டை. நான் வேண்டாம் என்று சொல்லியும் அவரே அந்த கேரக்டரின் வலிமையை உணர்ந்து மொட்டை அடித்துக் கொண்டார். முன்னதாக பிராஸ்தடிக் மேக்கப் மூலம் மொட்டையாக அவரை காட்ட முடிவு செய்திருந்தோம் .அதற்காக பல மணி நேர காத்திருப்பு .இதனால் அவரே மொட்டை அடித்துக் கொண்டு வந்து விட்டார் ” என்றார் இயக்குநர்.
படம் வளரனும்!