பி வி பி சினிமா நிறுவனத்தினர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்து வருகின்றனர். அதில் நாகார்ஜுனா- கார்த்தி= தமன்னா நடிக்க , வம்சி இயக்கத்தில் , ஒளிபதிவாளர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஏராளாமான பொருட் செலவில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்ல உள்ளனர்.
தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் செல்லாத செர்பியா நாட்டின் தலை நகரமான Belgrade நகரத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்க படுகிறது. மேலும் சில காட்சிகள் பெல்க்ரேட் நகரத்துக்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திலும் லயோன் நகரத்திலும் படமாக்க பட உள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விடும். எழில் கொஞ்சும் அந்த நாடுகளின் இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர் பி எஸ் வினோ படமாக்க வுள்ளார்.