
மலையாளம்,தமிழ்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் ஆட்சி செலுத்துகிறவர் மேனகாவின் புத்திரி கீர்த்தி சுரேஷ். இவரது சமகாலத்து எந்த நடிகையும் பெறாத புகழ்,வருமானம் இவரது தனி உடமையாகிப் போனது. இவரை விஞ்சுகிற நடிகை யார்?
கண்களுக்கு எட்டிய தொலைவில் யாரும் தெரிய வில்லை.’ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருக்கும் ,வார்த்தைகளில் வருவது கிடையாது’என்பார் கண்ணதாசன்.இதைப்போலவே கீர்த்தியின் மனமும்!
சொல்லும் வகைதான் புரியவில்லை. அதைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை .பெண்ணின் மனம் அல்லவா!
“ஒரு நடிகை என்றால் எல்லா கேரக்டர்களுக்கும் பொருந்திப் போகவேண்டும். நான் ‘கிளாஸ் ‘ மட்டுமல்ல. ‘மாஸ் ‘நடிகையுமாவேன். பல கேரக்டர்கள் ,புதிய கோணங்கள் .எனது புத்தி இதுதான்!
நான் திறமைசாலி என்பதால் எல்லா வகையான கேரக்டர்களையும் பண்ணியாக வேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலவற்றை தவிர்க்கிறேன். ஆபாசம் என்பது எனக்கு ஒவ்வாமை.கொட்டிக் கொடுத்தாலும் பண்ண மாட்டேன் ” என்கிறார் கீர்த்தி 
“அதே நேரத்தில் ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப் கேரக்டர்களும் வேண்டாம். குறும்புத்தனமாக நடிக்கணுமா, ஜாலியான கேரக்டரா வா ராஜா வா என வரவேற்கத் தயார். நான் நல்ல நடிகை என்கிற அந்தஸ்தை எந்த நிலையிலும் இழக்க மாட்டேன்.” என்கிறார் மேனகையின் மகள்.












