“மெர்சலில் அரசியல் இருந்தது. இதில் மெர்சலில் அரசியல் பண்ணியிருக்கிறார்கள்” என்று தலைப்புக்கு ஐடியா கொடுத்தாலும் அதையும் தாண்டி இருந்தது தளபதி விஜய்யின் பேச்சு.
“வெற்றி அடையணும்னு ஒரு கூட்டம் உழைக்கிது. ஆனா வெற்றி அடைந்துவிடக்கூடாதுன்னே ஒரு கூட்டம் உழைக்கி து. கேமை பார்த்து விளையாடுங்க! உசுப்பெத்துரவனுக்கு ‘உம்’னு இருந்திரு. கடுப்பேத்துறவன் கிட்ட ‘கம்’னு இருந்திருன்னு யாரோ சொன்னாங்க. இருந்து பாருங்க.லைப் நல்லாருக்கும்.!
தேர்தல்ல போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க. நாங்க சர்க்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கப்போறோம். நான் படத்த சொன்னேன். நிஜத்தில் சி.எம்.ஆனா நடிக்க மாட்டேன்” என்று பேசிய தளபதி விஜய் குட்டிக்கதை ஒன்றும் சொன்னார்.