ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள‘சர்கார்’திரைப்படம், தீபாவளிக்கு வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியதாவது, இதுவரை பார்க்காத ஆக்ஷன் படமாக சர்கார் இருக்கும். சில வசனங்கள் நான் எழுதினேனா, விஜய் எழுதினாரா என்று தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். சிலர் மட்டும் தான் அந்தக் கதாபாத்திரத்துக்கு வலிமையாகப் பொருந்திப் போவார்கள்.
அப்படி விஜய் கச்சிதமாக இருக்கிறார்.விஜய், என்ற மிகப்பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு நான் பூக்கடை வைக்க முடியாது. அதனால் பெரிய பீரங்கி வண்டிகளை வைத்திருக்கிறேன். நான் நடுத்தர வகுப்பு குடும்பத்தில் இருந்து வந்தவன். வலிகள் பழகியவன். அரசியல் என்பதை பெயர் மாற்றி, உருவம் மாற்றி சட்டையர் மாதிரி படத்தில் சொல்லவில்லை.உண்மையை இதயத்திலிருந்து சொல்லியிருக்கிறேன். தீபாவளியில் உங்களுக்கு சர்கார் படம் பார்க்கும் போது தெரியும்.விஜய்யுடன் வேலை செய்த துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களைக் காட்டிலும் சர்கார் பெரிய அளவில் பேசப்படும்” என்றார்.