” அம்மாவாசை ராவுல அர்த்த ராத்ரிலே இது தலைச்சன் பிள்ள மண்டை ஓட்டுல தயாரிச்ச மை.நல்ல கார்யத்துக்கு போறப்ப இந்த மய்ல போட்டு வச்சிட்டிப் போனீன்னா பார கார்யம் வெளங்கும்.பாக்றியா மையோட மகிமைய! பாதிலே போனா ரத்தம் கக்கி சாவே” என்கிற மிரட்டுகிற ரோட்டோரத்து மந்திரவாதிகள் மயில்சாமியோடு போய்விட்டார்கள் என்று பார்த்தால்…..?
இல்லை இல்லை சாலிகிராமத்துப் பக்கமாகத்தான் ஆபீஸ் போட்டுக்கொண்டு சின்னத் தயாரிப்பாளர்களின் குரல்வளையை கடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்பது தெரிகிறது.
அவுடதம் என்கிற படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான நேதாஜி பிரபு என்கிற சின்னஞ்சிறு தயாரிப்பாளர் .முன்னும் பின்னும் ரத்தக்கண்ணீர் விட்ட படியே பேசினார்.
“தயாரிப்பாளர் சங்கம் அல்லது கில்டிலோ மெம்பர் கார்டு வாங்கி வைத்துக் கொண்டு சாலிகிராமம் ரோட்டில்தான் திரிகிறார்கள். எங்களை மாதிரி கஷ்டப்பட்டு வீட்டை விற்று கடன் வாங்கி படம் எடுப்பவர்களிடம் வந்து படத்தை விற்றுத்தருவதாக சொல்லி தினமும் பணம் பிடுங்கித் தின்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். தினமும் ஐயாயிரம் பத்தாயிரம் என பிடுங்குகிறார்கள். இவர்களைப் பற்றிய புள்ளி விவரம் என்னிடம் இருக்கிறது. ” என்று கும்பி கொதிக்கப் பேசினார்.
தயாரிப்பாளர் சங்கம், கில்டு தலைகளுக்கு இதெல்லாம் தெரியாது என்று நம்ப வேண்டுமா?