விஜய்சேதுபதிக்கு ரூ.1.50 கோடியை திருப்பிக்கொடுக்க விஷால் முடிவு!

“தென்றலில் எனது உடல் தேய்ந்தது பாதி.-அது

தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி” என சொன்னதைப் போல ஒரு அற்புதமான படம் மீதி ஆகிவிடுமோ என்கிற பயம் இருந்தது.

விஜய் சேதுபதி, த்ரிஷா  நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.
,தயாரிப்பாளர்  நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில்  முன்னர் வாங்கிக்கொடுக்கப்பட்டது .அந்தத் தொகையை  தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட  ரிலீஸின்போது திரும்ப தருவதாக கூறியதால் நேற்று  பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்துஅப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில்,‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்த தொகையை தருவதாக கூறியபிறகு பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.

“,விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார். தயாரிப்பாளர் நந்தகோபால் அவருக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால் ,நந்தகோபாலிடமே பெற்றுக்கொள்கிறார்.  . ஆகவே,  பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்றும் விஷால்  நினைக்கிறாராம்.