பி.ஜே.பி.க்கு கடும் நெருக்கடி,!

தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது பல மாநிலங்களில்!

பத்திரிக்கை, ஊடகங்களின் வேலையும் வேகம் பிடித்து  சுறு சுறுப்பாகி விட்டது.!

முக்கியமான மூன்று மாநிலங்களில் கருத்துக் கணிப்பு வேலையில் இறங்கி ஆளும் கட்சியான பி.ஜே.பி.க்கு  பேதி மருந்து கொடுத்து இருக்கிறார்கள்.

ம.பி.,ராஜஸ்தான்,சத்தீஸ்கர், ஆகிய மூன்று மாநிலங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்த்துவிட்டு காவிக் கட்சியின் ஆயுளை கணித்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில்  காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்டை  முதல்வராக்க வேண்டும் என்பது அந்த மாநிலத்து மக்களின் விருப்பமாக இருக்கிறதாம்.

 200 தொகுதிகளில் காங்.கட்சிக்கு 142 இடங்கள்  கிடைக்கும் என்கிறது கணிப்பு. பி.ஜே.பி.க்கு 56 இடங்கள்.

ம.பி.யில் உள்ளா 230 தொகுதிகளில் 122 காங்.கட்சிக்கும் பி.ஜே.பி,க்கு 106 இடங்களும் கிடைக்குமாம். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடுமையான போட்டி என்கிறார்கள். 90 இடங்களில் காங்.கட்சி 47 இடங்களை பிடிக்கும் ,பிஜேபி 40 இடங்களைப் பிடிக்கும் என்கிறார்கள்.

இந்த கருத்துக் கணிப்பை கவனிக்கும் பிஜேபி சும்மா இருக்குமா? திருமங்கலம் தொகுதி அல்லது ஆர்,கே.நகர் தொகுதி பார்முலாவை பின்பற்றாதா என்ன? அமித் ஷா சாதாரணமான ராஜகுரு இல்லை. வெற்றி பெறவே பார்ப்பார்.