ஆந்திராவில் என்.டி ,ஆருக்கு செம மாஸ்! என்.டிஆரின் வம்சாவளியாச்சே! அதான் மற்ற முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக இருக்கிறார்.
இவரது படத்தின் புரமோஷன் காட்சிக்காக வந்திருந்த நிருபர்கள் என்.டி.ஆரின் குடும்ப பரிபாலனம் பற்றியும் கேட்டறிந்தனர்.
“என்ன சார் உங்க மனைவி லட்சுமி பிரணதியின் கைப்பக்குவம் எப்படி?” என்று கேள்விக்கு அப்படி ஒரு பதில் வரும் என எதிர்பார்க்கவில்லை.
“என்ன இப்படி கேட்டுட்டிங்க. ஒரு வாட்டி எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் பாருங்க.ஜென்மத்துக்கும் வரவே மாட்டீங்க, அப்படி ஒரு கைப்பக்குவம்”
“நான் நல்லா ருசியா சமையல் பண்ணுவேன். என்னை விட எங்கம்மாவின் கைப்பக்குவம் இன்னும் ஜோரா இருக்கும். லட்சுமி நல்லா சாப்பிடுவா.வீட்டு வேலையைக் கூட கவனிக்க மாட்டாங்க.” என சொல்லிவிட்டார்.
இப்படி சொன்னவருக்கு வீட்டில் என்ன பரிசு கிடைத்ததோ!