‘இரவுகளைப் பார்த்த துண்டு,
உறவுகளைப் பார்த்ததில்லை.
துடித்தேன், தவித்தேன்,
உன்னைத்தான் நினைத்தேன்.
சொல்லத்தான் வார்த்தை இல்லை.’
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக உறுதி செய்யப்பட்ட கல்யாணத்தையும் வேண்டாமென விலக்கி விட்டவர் ராஷ்மிகா. அழகானவர்.
“நான் நிறைய ஜெயிக்க வேண்டும் .அதனால் கல்யாணத்தையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன். எனக்கு வாய்ப்புகள் வருகிறது.
எனக்கும் அம்மாவுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. எல்லா உரிமைகளும் எனக்கு இருக்கிறது. ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறபோது அம்மாவிடம் ‘எல்லா பிரண்ட்ஸ்களுக்கும் பாய் பிரண்ட்ஸ் இருக்காங்க. அம்மாக்களும் அனுமதிக்கிறாங்க. எனக்கும் ஒரு பாய் பிரண்ட் இருக்கக்கூடாதா என்று கேட்டேன்.”என்றார்
எந்த அம்மாதான் அனுமதிப்பார்?
தேர்ந்து எடுத்து விட்டு அம்மாவிடம் சொல்வதுதானே சினிமா உலக வழக்கம்?