
“பாலியல் வன்முறை என்கிற பெயரில் ஆண்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும் ‘மீ டூ ‘ வழியாக சொல்லி விடுகிறார்கள். ஊடகங்களும் பெண்கள் என்பதால் முக்கிய செய்திகளாக்கி விடுகின்றன
ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ உருவாக்கியதுதான் இந்த மீ டூ ஹாஸ் டாக் .இதுதான் எல்லா பெண்களுக்கும் குறிப்பாக சினிமா நடிகைகளுக்கு பயன் பட்டு வருகிறது. 
“ஆண்கள் என்ன பாவப்பட்டவர்களா , அவர்களும் பெண்களால் பாதிக்கப்படுகிறார்கள் .அவர்களுக்கு பாதுகாப்பில்லாமல் போய் விடுகிறது “என்று அமெரிக்காவில் ‘ஹிம் டூ’ என்கிற ஹாஸ் டாக் ஆரம்பமாகி இருக்கிறது. இதை தொடங்கியதும் ஒரு பெண்தான்!
ஆகவே மெய்யன்பர்களே, பெட்ரோல் விலை ஏற்றம், விலை வாசி உயர்வு ,லஞ்சம், ஊழல் இவைகளை மறப்பதற்கு இந்த ஹாஸ் டாக்ஸ் நமக்கு பேருதவியாக இருக்கும்.!




