
குலுமணாலியில் கொட்டும் பனி மழையில் காதல் டூயட் பாடிவிட்டுத் திரும்பிவிடுவார்கள் நமது நடிகர்கள். இதற்கே பிளாங்கெட் ,போர்வைகள் போதாது , ஜெர்கின்ஸ், உள் சுவெட்டர்,வெளி சுவெட்டர் ,என துணை அயிட்டங்கள் வேற என அமர்க்களப்படும்.
தற்போது ரசத் ரவிஷங்கர் இயக்கத்தில் தேவ் என்கிற படம் இமயமலைப்பகுதியில் நடந்து வருகிறது.
கார்த்தி,ரகுல்பிரீத்சிங் ,மற்றும் பிரகாஷ்ராஜ் நவரசநாயகன் கார்த்திக் ஆகியோர் நடித்து வரும் தேவ் படத்தின் பாடல் காட்சிகள் குலுமணாலியில் படமாகிவருகிறது.
வந்தது வந்துவிட்டோம் அப்படியே எவரெஸ்ட் பக்கமா போய் ஸ்டண்ட் காட்சிகளையும் அள்ளிப்போட்டு வந்தால் என்ன?
ரசத் சொல்ல நோ அப்ஜெக்சன் சொல்லி விட்டார் கார்த்தி.
இதுவரை யாரும் கோலிவுட்டிலிருந்து எவரெஸ்ட் பக்கமாக போனதாக தெரியவில்லை. முதல் முறையாக கார்த்தி தான் பனிக்கட்டியில் ஸ்டண்ட் பண்ணப்போகிறார். வாருங்கள் நிறைய அனுபவங்களுடன்!












