லஞ்சம் ஊழலுக்கு திறந்த வெளியாகி இருக்கிறது தமிழ்நாடு என்பது அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் எந்தக் கட்சியிலும் சேராதவர் சத்யராஜின் மகள் திவ்யா. இந்தியாவின் சிறந்த சத்துணவு டாக்டர்கள் மூவரில் இவரும் ஒருவர்.
அண்மையில் இந்தியப் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அரசுப் பள்ளிகளில் நடந்து வருகிற மதிய உணவுத் திட்டம் பற்றிய கருத்துகளை பகிரங்கமாக சொல்லி இருக்கிறார். அதற்கு முன்னதாக மாநில அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துப் பேசியும் இருக்கிறார். “லஞ்சம், நலன் புறக்கணித்தல் எல்லாமே நடக்கிறது.” என்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
இவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருப்பாரோ?
“நான் மனதளவில் ஒரு கம்யூனிஸ்ட்.எனக்கு நல்லகண்ணு அய்யவைத் தெரியும்.அரசியல்வாதிகள் எப்படி வாழவேண்டும்,தூய்மையாக நடக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு நல்ல முன்னுதாரணம்.” என்கிறார் திவ்யா.
‘