“நீ மண்ணகத்தை ஆளவந்த மன்னனாக வேண்டும் ,நான் உன்னகத்தை ஆளவந்த ராணியாக வேண்டும் ” இப்படித்தானே சிம்பு -நயன் இருவரும் காதல் படகில் ஊர்வலம் போனார்கள்?
இடையில் என்ன நிகழ்ந்தது எவன் வேட்டு வைத்தான்?
அய்யா நீங்களா?
“சாமி நானில்லை. வைத்தது சோதிடன்,!”
எதோ கதை கேட்கிற மாதிரி இல்ல? அட அந்த கதைக்குள் ஒரு கனவு தேசமே இருக்கிறது !
சிம்புவை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா என ஒரு ஜோதிடரிடம் கேட்டார்களாம்.
அதற்கு அந்த ஜோதிடன் ” நீ ராணி மகராணி! வேண்டாம் உனக்குத் திருமணம். இப்படியே கல்யாணம் பண்ணாமல் இருந்து விட்டால் நீ தான் தமிழ்நாட்டுக்கு சி.எம்.” என சொல்லி விட்டானாம்.
அதனால்தான் நயன்தாரா கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை என ஒரு கதை லேட்டஸ்ட்டாக போய்க் கொண்டிருக்கிறது,
இப்படியெல்லாமா யோசிப்பாய்ங்க?