மறுபடியும் அமலாபால் ஒரு டுவிட்.
போகிறபோக்கைப் பார்த்தால் மீ டூ பிரச்னையில் பாடகி சின்மயிக்கு கோயில் கச்சேரி வாய்ப்புக் கூட கிடைக்காது போல.! வாய்ப்பு அமலாபாலுக்கு.!
இன்று காலை லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில்சுசி.கணேசன் செந்தட்டியை எடுத்து தானே தடவிக் கொண்டிருக்கிறார் போல !
ஏழரை எட்டாத தூரத்தில் பறந்தாலும் பிளேனில் பறந்தாவது அதைப் பிடித்து மேலே விட்டுக் கொள்வார் போல சுசி!
“இன்று சுசி எனக்குப் போன் பண்ணி மீ டூ பிரச்னையைப் பற்றி எனது நிலையை சொல்லுமாறு கேட்டார். ஒரு கட்டத்தில் பிறகு சுசி.கணேசன் ஆபாசமாக பேச ஆரம்பித்தார். கூடவே அவரின் மனைவியும் சேர்ந்து கொண்டு சிரித்தார். பின்னர் இருவரும் ஆபாசமாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.” என அமலாபால் கூறி இருக்கிறார்.