படத்தின் பெயர் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, விமல் அஷ்னா சாவேரி, பூர்ணா ஆகியோர் நடித்திருக்கும் படம். படத்தில் ஸ்டில்லை பார்த்தாலே மச்சத்தின் சைஸை தெரிந்து கொள்ளலாம். படத்தின் இயக்குநர் முகேஷ் சொல்வது என்ன?
“கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.
இன்று தியேட்ட்ருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு.
இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள்…அவர்களுக்கு எது பிடிக்குமோ அதை தான் கதையாக சொல்கிறோம்.
இந்த படத்தின் டீசரை யூ டியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்பார்த்திருக்கிறார்கள்.
அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடை பெற்றது. தென்காசியிலும் சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.
முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது.
விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார்இயக்குநர் ஏஆர் .முகேஷ்.