நடிகை பாவனா தொடர்பான பாலியல் வழக்கில் மாட்டியிருப்பவர் நடிகர் திலீப். இவரை கேரளத் திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் சேர்த்ததைப் பற்றி ரேவதி,பார்வதி உள்ளிட்ட நடிகைகள் தலைவர் மோகன்லாலுடன் கடுமையாக சண்டையிட்டனர்.
“ஒழி”என்று திலீப்பும் ராஜினாமா செய்தார். தனது பிறந்த நாளை இரண்டாம் மனைவி காவ்யா, முதல் மனைவி வழியாக பிறந்த மகள் மீனாட்சி ஆகியோருடன் ஒரு ஓட்டலில் எளிமையாக கொண்டாடினார்.
காவ்யா வழியாக பிறந்த பெண்குழந்தையின் படம் வெளியில் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் திலீப்.
‘கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் ‘என்கிற தனது புதிய படத்தின் பெயரை வெளியிட்டார். இவருக்காக நிஜத்தில் ஒரு வக்கீல் வழக்காடி வருகிற நிலையில் கதைக்காக வக்கில்லகி இருக்கிறார்.