“கட்டிப் பிடித்தார் ,காதுகளில் காமம் சொன்னார், தனியாக வரச்சொன்னார் ,”என இன்னும் பல பாலியல் குற்றங்களைச் சொல்லி வந்த ஏரியாவில் தாறுமாறான செய்திகள்.
நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் வன்முறை குற்றம் சாட்டி வழக்குப் பதிவாகி இருக்கிறது. நானாவும் மான நட்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்தக் கதையில் திடீர் என்ட்ரி கொடுத்திருக்கிற ராக்கி சாவந்த் என்கிற நடிகை அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
“தனுஸ்ரீ தண்ணி அடிப்பார். பெண்களைக் கண்டால் கிக் வந்து விடும் .ஓரினச்சேர்க்கையில் விருப்பம் உள்ளவர் ” என கண்டமேனிக்கு கேரக்டரை கூறு போட தனு ஸ்ரீ கலங்கி விட்டார்.
“பொய் சொல்கிறார் ராக்கி .விடப்போவதில்லை”என சொல்லி பத்துக் கோடிக்கு மான நட்ட வழக்குப் போடப்போவதாக தனு ஸ்ரீ சொல்ல , “அடி போடி உனக்கு நானென்ன இளைச்சவலா?” என்கிற பாணியில் நாற்பது கோடிக்கு வழக்குப் போடுவதாக பதிலடி கொடுத்திருக்கிறார்,
இவ்வளவு கோடிகள் எங்கிருந்து வந்தன.?முதலில் அதை விசாரியுங்கள்.