அஜித் -நஜ்ரியா- ரகுமான் கூட்டணி ரெடி.

தல அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இயக்குநர் வினோத் என்பது மட்டும் உறுதி. புதிய சிந்தனையாளர். இதனால் தல 59 என்பதாகவே சொல்லி வருகிறார்கள். இந்தி ரீமேக் .
இங்க்லீஷ் விங்கிலிஸ் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே ஸ்ரீ தேவி கால்ஷீட் வாங்கி விட்டார். தனக்குப் படம் பண்ணித் தரும்படி கேட்டுக்கொண்டதை தலயும் ஒப்புக்கொள்ள அப்பவே முடிவாகி விட்ட விஷயம்தான்.
அஜித்துடன் நஜ்ரியா நடிக்கப்போவதாக செய்திகள் முதலில் கேரளத்தில்தான் பரவின. அவர்கள்தான் இசை அமைப்பாளர் ஏஆர்ரகுமான் என்பதையும் சொன்னார்கள். நஜ்ரியாவின் தீவிர ரசிகர்களே ஒரு டிசைனை உருவாக்க அதை தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுவிட்டார் நஜ்ரியா.
ஜனவரியில் படப்பிடிப்பு ஆரம்பம். இதுவும் அவர்கள்தான் சொன்னார்கள்.