இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தவர் யாசிகா ஆனந்த். பிக்பாஸ் பேமஸ். தாராளமாக நடிப்பவர்.
இவரும் மீ டூ பார்ட்டிதான்.
“ஒரு படப்பிடிப்பில் மூத்த இயக்குநர் ஒருத்தர் எனது மேலாடையை சரி செய்வதுபோல சில்மிஷம் செய்தார். முத்தக்காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று சொல்லித்தருவதைப் போல இம்சையை கூட்டினார். நான் அவரிடம் இருந்து தப்பி அம்மாவுடன் வந்து விட்டேன்.
போலீசில் புகார் செய்தேன்.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் பார்வையும் தப்பாகவே இருந்தது.
ஒரு முன்னணி ஹீரோவின் அப்பாவுக்கு என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆசை. இதை எங்கம்மாவிடமே சொல்லி இருக்கிறார்.இதென்ன கொடுமைன்னு நினைக்கிறீங்களா…என்ன பண்றது ?மீ டூ ரொம்பவும் தேவைங்க” என்கிறார் யாசிகா.
கிடைத்தால் கிழவர்களும் விட மாட்டார்கள் போலிருக்கிறது.