களவாணி மாப்பிள்ளை. (விமர்சனம்.)

தீபாவளிப் பந்தயத்தில் பங்கு கொள்ள பயந்து பம்மியவர்களுக்கு மத்தியில் “நான் கலந்து கொள்கிறேன்”என்று தைரியமுடன் கால் வைத்ததற்கே ஊக்கப் பரிசு கொடுத்தாக வேண்டும்.
90 களில் கமர்ஷியல் படங்களை கொடுத்தவர் மணிவாசகம். அப்போது அவருக்கு வலுவான துணையாக இருந்தவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். மணிவாசகம் மறைந்த பிறகு அவரது மகன் காந்தி மணிவாசகம் இயக்கி இருக்கிற முதல் படம் களவாணி மாப்பிள்ளை.
அப்பாவுக்கு கவுண்டமணி கை கொடுத்தது போல மகனுக்கு யார் கை கொடுத்திருக்கிறார்?
அட்டகத்தி தினேஷ்,அதிதி மேனன் ,தேவயானி, ஆனந்தராஜ் ஆகிய முக்கிய முகங்களில் எந்த முகம் உதவியாக இருந்திருக்கிறது?
முதலில் கதை நோஞ்சானாக இருக்கிறது.
கார் ஓட்டத் தெரிந்தவனுக்கு மகளை மனைவியாக்குவது என்கிற காமடியில் கதையை தொங்கவிட்டிருக்கிறார்கள். லாஜிக் ஃப்ரீ !
நெடிய இடைவெளிக்குப் பின்னர் தேவயானி ரிச்சாக வந்து இருக்கிறார் , மேக் அப்பும்தான்!
கார் ஓட்டத் தெரியாத தினேசும் ,அதிதி மேனனும் காதலிக்கிறார்கள். கார் ஓட்டத் தெரியாதவர் என்பதால் தன்னை மதிக்காமல் வாழ்கிற மனைவி தேவயானியை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்கிற ஆசையில் ஆனந்தராஜ் போடுகிற திட்டம், இதற்கு உதவுகிற முனீஸ்காந்த்.சாம்,மொட்டை ராஜேந்திரன்,என போகிறது.
“இந்த வீட்ல என்ன நடக்கிதுன்னு ஒண்ணுமே புரியல”என ஒரு கட்டத்தில் சொல்வார் தேவயானி.
நூத்துல ஒரு வார்த்தைங்க!