முடி இல்லாததால் டை அடிக்க முடியவில்லை. வழுக்கையாகி விட்டது.
அவரது உடலுக்கு வேட்டி,சட்டை குர்தா வசதியாக இருக்கிறது.
எப்படி கவிஞர் வைரமுத்துவுக்கு குர்தா ஜிப்பா அடையாளமாகி விட்டதோ அதைப் போல ரஜினிக்கு அவரது உடைகள் அடையாளமாகிவிட்டது.
கதர் சட்டை போடுகிறவர்கள் எல்லாம் எளிமையானவர்கள் என சொல்லமுடியுமா?
அதைப்போலத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமையாக வாழ்வதாகச் சொல்வதும்!
அவரே தன் வாழ்க்கை முறையைப் பற்றி சொல்கிறார் கேளுங்கள்.!
“நான் எளிமையாக வாழ்கிறேனா? போயஸ்கார்டன் ,பெரிய வீடு.பி.எம்.டபிள்யூ 7 சீரியல் கார்கள்.செவன் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுகிறேன்.இது எளிமையான வாழ்க்கையா?”—சிரிக்கிறார் சூப்பர் ஸ்டார்.
“நான் வாழ்கிற வாழ்க்கையை சிம்பிளிசிட்டின்னு சொல்லிட முடியாது!”
அவரே சொல்லிவிட்டார்.