2 பாயிண்ட் ஒ படத்துக்குப் பின்னர் இயக்குநர் ஷங்கர் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது
படத்தின் நிறை குறைகளை குறிப்பிட்டு வெளியாகிய விமர்சனங்களின் அடிப்படையில் தனது குழுவில் சில மாறுதல்களை செய்திருக்கிறார் என்கிறார்கள்.
குறிப்பாக 2 பாயிண்ட் ஒ வின் வசனங்கள் ஷங்கரின் முந்தைய படங்களைப் போல் இல்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டு.
இதனால் ஜெயமோகனை தவிர்க்க முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள். சுஜாதாவை விட தன்னை அதி மேதாவி என்கிற நினைப்பு ஜெயமோகனுக்கு உண்டு.
மேலும் திரைக்கதை அமைப்பதில் சிறந்தவர்களை தன்னுடன் வந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியன் 2 வில் புதியவர்கள் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.