ஜாலியாக பேசி வம்படிப்பதற்கு கூட நடிகர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் சில நடிகைகள் பச்சை பச்சையாக ஏ ஜோக்குகள் சொல்லி சிலரை அலற விடுகிறார்கள்.
ரசித்தாலும் வம்பு,பதில் ஜோக்ஸ் சொல்லி அளந்து விட்டாலும் வம்பு என அந்த இடத்தையே நடிகர்கள் காலி செய்து விடுகிறார்கள்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சுபாஷ் கய் மீது பயங்கரமாக செக்ஸ் புகார் சொல்லி இருந்தார் கதே ஷர்மா என்கிற நடிகை,மாடல்.
ஆடிப்போனார் கய். அதுவும் எப்படிப்பட்ட புகார்?
“தயாரிப்பாளரின் வீட்டில் வைத்து தன்னுடைய ரகசிய பகுதிகளில் அத்துமீறி நடந்து கொண்டார்,பலவந்தம் செய்தார். அன்றைய இரவை சந்தோஷமாக கழிக்காவிட்டால் சும்மாவிடமாட்டேன் என்பதாக மிரட்டினார்” என்று போலீசில் புகார் செய்திருந்தார் .
தயாரிப்பாளர் கடுமையாக மறுத்தாலும் போலீஸ் தனது கடமையை செய்தது .
முடிவில் கதேயின் புகாரில் ஓன்று கூட உண்மை இல்லை எல்லாமே ஜோடிக்கப்பட்டவை என்கிற உண்மையை போலீஸ் சொன்னது. இதில் என்ன வேடிக்கை தெரியுமா, கதே தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டதுதான். “தன்னால் ஸ்டேஷன்,கோர்ட்டு என்று அலைய முடியாது ,அதனால் புகாரை திரும்பப்பெறுவதாக” சொல்லிவிட்டார் நடிகை..