மக்கள் நீதி மையத்தின் செயற்குழு நிர்வாகக்குழுக்கூட்டம் நாளை காலை பத்து மணிக்கு ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.இக்கூட்டத்தில் தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியினரின் கருத்துகளை அறிந்த பின்பு கூட்டணி குறித்து முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.