தமிழனுக்கே தனி ஆர்மி இல்லப்பா.! ஆனா தங்கத்தலைவி ஓவியாவுக்கு ஆர்மி வைத்து அழகு பார்த்த சீமை எங்க தமிழச்சீமைதான்!
அந்த சீமையில் அவரை கண் கலங்க வைத்த கல்பிரிட்கள் யாரப்பா!
இவருக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதை கண்டு பிடித்து சொன்ன பிக்பாஸ்க்கு நன்றிகள் சொல்ல தமிழர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
“சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாகப் பயன் படுத்துகிறார்கள்”என்கிற கடுமையான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் ஓவியா.
“சின்ன சின்ன வேஷங்களில் நடித்திருக்கும் படங்களுக்குக் கூட என் பெயரை சொல்லி விளம்பரம் செய்கிறார்கள். வியாபார பொருட்களுக்கும் எனது பெயரை பயன் படுத்துகிறார்கள்.தப்பாக தெரிகிறது.வருத்தமாக இருக்கிறது.” என்கிறார்.
ஆர்மி தலைவிய நோகடித்து விட்டார்களே!