முன்னாள் நீதிபதி மூ.புகழேந்தி இயக்கியிருக்கிற ‘வேதமானவன்’ படத்தின் நாயகி ஊர்வசி ஜோஷி மத்திய பிரதேசத்து மாடல்.! இயக்குநர் ராதிகா ஒரு நடன காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்து காட்சி. ஷாட் ரெடி என்றதும் கதாநாயகியை காணவில்லை. வில்லன் நடிகரையும் காணவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து காணவில்லை என்றால் கண்ணும் காதுமில்லாமல் கதைகள் கிளம்பாதா? இருவரையும் தேடினால் ஊர்வசி ஐஸ்கிரீம் சாப்பிட்டுகொண்டு வில்லனுடன் வந்தார். பிறகுதான் படக்குழுவினருக்கு நிம்மதி.