ரஜினியுடன் விஷால் திடீர் சந்திப்பு!

இசைய ராஜா 75 இசை நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி மாதம் 2 ,3 தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது இந்த இசை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொள்ள நடிகர் ,நடிகைகளை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள்.இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் விஷால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ,இசையராஜா 75 விழாவில் கலந்து கொள்ள வருமாறு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.